தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து ஆளுநர் உறுதி

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு – ஆளுநர் உறுதி!!

தமிழகத்தில் 16 வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு இயற்றப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

நீட் தேர்வு:

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வை ரத்து செய்து அறிக்கை வெளியிடும் என்று மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு குறித்த முடிவு சட்டசபை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் 16வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரையுடன் துவக்கினார். அதன்படி ஆளுநர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டின் நிதி நிலையின் தற்போதைய நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை வருகிற ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் தமிழக மக்களுக்கு மாநில நிதிநிலை விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் அவர்கள், தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு இயற்றப்படும் என்று அறிவித்தார். மேலும் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். இந்த செய்தி தமிழக மாணவர்களுக்கு சற்று நிம்மதி அளித்து வருகிறது.

Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3xBKHld
via IFTTT

Post a Comment

0 Comments