Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் பதிவிறக்கம்

மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி? புதிய வழிமுறை இதோ!!


நாட்டு மக்களின் மிக முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது ஆதார் அட்டை. தற்போது ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் இல்லாமல் ஆன்லைன் மூலம் ஆதார் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்பது குறித்த வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ஆதார் கார்டு:

மத்திய அரசால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டை தற்போது மக்களின் அன்றாட வாழ்விற்கு ஓர் முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. தற்போதைய காலத்தில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கணக்குகள் தொடங்குவது முதல் செல்போன் சிம் கார்டு வாங்குவது வரை செய்ய முடியும். இதுபோல் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு ஆதார் கார்டினை கட்டயமாக்கியுள்ளது. தற்போது மக்களுக்கு பயனடையும் வகையில் ஆதார் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் 6 முதல் பகல் 12 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

அது என்னவென்றால், சில மக்கள் ஆதார் கார்டு பதிவு செய்யும் பொழுது ஓர் செல்போன் எண்ணை வழங்கியிருப்பர். ஆனால் தற்போது அந்த செல்போன் எண் அவர்களிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் ஆதார் கார்டினை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. மேலும் செல்போன் எண்ணை மாற்றினால் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான புதிய வழிமுறை வெளியாகியுள்ளது. அதன்படி செல்போன் நம்பர் இல்லாமல் ஆன்லைனில் ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்பதை காணலாம்.

புதிய வழிமுறை:

  • பயனாளர்கள் uidai.gov.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் Order aadhaar Reprint என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு அதில் தங்களது ஆதார் 12 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும் அல்லது இதற்கு மாற்றாக 16 இலக்க வி.ஐ.டி எண்ணையும் உள்ளிடலாம்.
  • இதை தொடர்ந்து செக்யூரிட்டி கோர்டினை பதிவு சேட்டு My Mobile is not Registered என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு மாற்று தொலைபேசி எண் கேட்கும். அதில் மாற்று தொலைபேசி எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி பெற வேண்டும்.
  • அதனை பதிவு செய்து ஆதார் பிரிவியூ பார்த்த பிறகு நீங்கள் தங்களது ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3z6e68X
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments