Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு கறார் உத்தரவு; இதைச் செய்யலனா அவ்வளவுதான்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போன்றவற்றின் மூலம் முடுக்கிவிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 


தொடர்ந்து இரண்டாவது நாளாக 20 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி பாதிப்புகள் குறைந்துள்ளன. 


நேற்று ஒரேநாளில் புதிதாக 18,023 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 31,045ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் படிக்கின்றனர். இவர்கள் சரியான பாடம் படிக்கின்றனரா என்பதை தொலைபேசி வாயிலாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேட்டறிந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

அதேசமயம் பெரிய அளவில் கல்வி சார்ந்த பணிகளின்றி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவிற்கு எதிரான போரில் பல்வேறு தரப்பினரும் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். கோவிட்-19 பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. அதில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையினரையும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள், கொரோனா நோயாளிகளின் தகவல் தொகுப்பு சேகரிக்கும் பணிகள் அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் ஒதுக்கும் பணிகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்ய மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் பள்ளிக்கல்வி செயலகத்திற்கு சென்றுள்ளது. உடனே பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கொரோனா பணிக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தினால் உடனே ஆசிரியர்கள், அலுவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. உத்தரவை பின்பற்றாத நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2ThsdI5
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments