சிபிஎஸ்இ தனிதேர்வர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!தனிதேர்வர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்ய பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபிஎஸ்இ பள்ளிகள் வழக்கமாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் யூனிட் தேர்வு, பருவநிலை தேர்வு உள்ளிட்டவற்றை நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா பரவலால் இத்தகைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவது அவசியம். 


அவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும். உயர்கல்வியில் சேருவதில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாமல் இருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3BqIuvQ
via IFTTT

Post a Comment

0 Comments