Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளிஆசிரியர்களின் ஊதியம் பாதியாக குறைப்பா??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்


  *ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளிஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக்குறைத்துகரோனா முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றுசமூக வலைதளங்களில் கருத்துகள் பரவும்நிலையில்,'


பள்ளிக் கல்வித்துறை ஏதேனும் திட்டம்வைத்துள்ளதா?* என்ற கேள்விக்குஅமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பதில்அளித்தார்.

 

 

 

📌மணப்பாறை அரசு மருத்துவமனைஅரியமலங்கலம் குப்பைக் கிடங்குசத்திரம்பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிஆகியவற்றைப் பள்ளிக்

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழிஇன்று (மே 20) நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

📌சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆய்வுசெய்த பிறகுசெய்தியாளர்களிடம் அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழிகூறுகையில், "சத்திரம் பேருந்து நிலையம்விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாகநடைபெற்று வருகின்றனமுதல் கட்டப்பணிகள் ஜூன் மாத இறுதியில்நிறைவடையும் என்றும், 2-ம் கட்டப் பணிகள் 3 மாதங்களிலும் நிறைவடையும் என்றும்அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

 

📌பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தைஆணையராக மாற்றியது

தொடர்பாகபல்வேறு தரப்பில் இருந்தும்வரப்பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்துஉரிய முடிவை அறிவிப்பார்.

 

📌கரோனா தொற்று குறைந்த பிறகேபிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்துஆலோசனை நடத்தப்படும்என்றார்.

 

📌ஓராண்டாக வேலையின்றி உள்ளஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக்குறைத்துகரோனா முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றுகருத்துகள் பரவி வரும் நிலையில்பள்ளிக்கல்வித்துறைக்கு ஏதேனும் திட்டம் உள்ளதாஎன்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நானும்சமூக வலைதளத்தில் பார்த்தேன்இதுகுறித்துமுதல்வருடன் ஆலோசித்துஅவர் கூறும்ஆலோசனையின்படி அறிவிக்கப்படும்என்றார்.

 

 

 

📌அரியமங்கலம் குப்பைக் கிடங்கில்செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, "அரியமங்கலம் குப்பைக்

கிடங்கு பிரச்சினை தொடர்பாக,சட்டப்பேரவையில் பல முறை பேசியுள்ளேன்.அரியமங்கலம் குப்பைக் கிடங்குபிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வுகாணப்படும்என்றார்.

 

 

📌முன்னதாகமணப்பாறை அரசுமருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு,செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல்முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை வரைகிடைத்த நாட்களைகரோனா பரவலைத்தடுக்க முந்தைய காபந்து அரசு சரியாகப்பயன்படுத்தத் தவறிவிட்டதுஆனால்,

  திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூடஆகவில்லைகரோனா பரவலைத் தடுக்கவும்கட்டுப்படுத்தவும் தொலைநோக்குப்பார்வையுடன் தீவிரமாகக் களப் பணியாற்றிவருகிறதுநகர்ப்புறங்களில்நடத்தப்படுவதுபோல்கிராமப்புறப்பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்துவதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைநடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்என்றுஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதெரிவித்தார்.

 

 

📌ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுகரூர் எம்.பிஎஸ்.ஜோதிமணிஎம்எல்ஏக்கள்மணப்பாறை பி.அப்துல்சமதுதிருச்சி கிழக்குஎஸ்.இனிகோ இருதயராஜ்மாநகராட்சிஆணையர் சு.சிவசுப்பிரமணியன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்


Reactions

Post a Comment

0 Comments