தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் உயர்கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அமைச்சரின் விளக்கம்:
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது உயர்கல்விதுறை சம்பந்தப்பட்ட உள்ள பல சிக்கல்களை குறித்தும் விளக்கமளித்தார். அமைச்சர், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்கள் முறைகேடாக நியமிக்கப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது. பணி மூப்பு அடிப்படியில் மட்டுமே அவர்கள் பணி நிரந்தரம் பெறுவார்கள். இது தொடர்பாக பணம் வசூலிக்கும் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
பல்கலை மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள முறைகேடுகளை பற்றி விசாரணை நடக்கிறது. இது தொடர்பான முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். இதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் தேர்வு கட்டணம் செலுத்தாமல் தேர்வெழுத மாணவர்கள் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.o
23 தனியார் கல்லூரிகள் தேர்வு கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர். வரும் திங்கள் கிழமைக்குள் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்களின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். எம்.ஏ முதலாம் ஆண்டு சமூக அறிவியல் பாடத்திலும் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக குழு நியமித்து முதல்வருடன் கலந்துரையாடி அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகத்திற்குள் புதிய கல்விக் கொள்கையை நுழைய அனுமதிக்க மாட்டோம். அதற்காக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3u57aVG
via IFTTT
0 Comments