Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அரசு சார்பில் விருது: விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு !

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகின்ற 30ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2021 அன்று வழங்கப்படவுள்ளது. * மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பபணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்.10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.)

* மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.

மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை - 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகின்ற 30ம் தேதி அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும், விண்ணப்பப் படிவங்களை https://ift.tt/34nXL1Z என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2S31aQi
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments