பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஜூன் 14-ந்தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது எனவும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, 5 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதே போல, தங்களது பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் 9-ம் வகுப்பை தொடர்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3xA21qS
via IFTTT
0 Comments