தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இ-பதிவு புதிய வசதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில் சில தளர்வுகளை அறிவித்து ஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இ-பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதில் உடனடியாக சென்று பதிவு செய்வதன் மூலமாக அவசர தேவைகளுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி நபர், குழு என மாவட்டங்களுக்கு இடையே செல்லுவோர் பதிவு செய்வதன் மூலமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பு இன்றிலிந்து இ-பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/2Sixbnz
via IFTTT
0 Comments