விசாரணை
டில்லி உட்பட நாட்டின் எட்டு மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி, புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி நிறுவனம் ஆகியவற்றில், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான தேர்வு, கடந்த மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டு, பின் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, வரும் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மொத்தமுள்ள, 815 இடங்களுக்கு, 80 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், 16ல் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் டாக்டர்கள் மனு செய்தனர்.இந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
மன உளைச்சல்
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:வரும் 16ல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது நியாயமற்றது. இன்னும் ஒரு மாதமாவது தேர்வை தள்ளிப்போட வேண்டும். தேர்வு எழுத வேண்டிய டாக்டர்கள் பலர், தொலை துாரங்களில் கொரோனா தடுப்பு பணி செய்து வருகின்றனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3vnprOU
via IFTTT
0 Comments