தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய்ந்து பரிந்துரை செய்ய, டில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில், கடந்த ஆண்டு, அரசு கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதி கல்லுாரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பினரிடம் இருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து தீர ஆரா ய்ந்து, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள், அதனால் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளை கண்டறிய வேண்டும்.பல்வேறு தொழில் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை எவ்வாறு உள்ளது என, ஆய்வு செய்ய வேண்டும்.
தொழிற்கல்விகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தால், அதை சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக, டில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் தன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/35n4KYN
via IFTTT
0 Comments