ஆன்லைன் கல்வி பயிற்றுவிப்பதில் பெற்றோர்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு வீடு தான் முதல் பள்ளி என்றும், பெற்றோரே முதல் ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீடுகளில் பாதுகாப்பான, நேர்மறையான சூழலை பெற்றோர்கள் உருவாக்கித்தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களை வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வழிநடத்த வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வழிகாட்டுதலை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கல்வித்துறை செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3iSZ5l9
via IFTTT
0 Comments