Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு.


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிஷீல்டு ஒரு டோஸ் ரூ.780ஆகவும், கோவாக்சின் ஒரு டோஸ் ரூ.1,410ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி ஒரு டோஸ் சேவை கட்டணத்துடன் ரூ.1,145ஆக விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.


தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.150 க்கு மேல் சேவை கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை தொடர்ந்து கண்காணிக்க மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்டணம் வசூலிக்க எந்தவொரு தனியார் தடுப்பூசி மையத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களில், தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று உரையாற்றிய திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையை அறிவித்தார்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3v8DaJ0
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments