Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கவும், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


IMG_20210622_101902

கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும்

.com/

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. இதையடுத்து, கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும் ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.


தொடர்ந்து, கொரோனா இரண்டாவது அலையின் கோரதாண்டவம் காரணமாக 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையும் குறைந்து வருவதால் ஜூலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் மாநில அரசின் பாடத்திட்ட புத்தகங்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர் புத்தகங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு  இப்போதைக்கு இல்லை என்பதால், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது.


பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள் - Download here...

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2TUqgld
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments