Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் கற்றல் பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஓன்று சேர்ந்து செயல்பட புதிய சங்கம்

*அனைவருக்கும் வணக்கம்*

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் கற்றல் பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஓன்று சேர்ந்து செயல்படுவதற்கு ஏதுவாக ஒரு புதிய சங்கமானது தோற்றுவிக்கப்பட்டுள்ளது.


*Visit more information :  www.tnstcca.com என்ற வலைத்தளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது 

சங்கம் சார்ந்த (A to Z) அனைத்து தகவல்களும் அத்தளத்தில் தங்களின் மேலான பார்வைக்காக தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது, பார்வையிட்டு தெரிந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*

*இப்படிக்கு*
*A.விக்ரம்* 
*மாநிலத் தலைவர்*

உறுப்பினர் சேர்க்கை படிவம் - இங்கே கிளிக் செய்யவும் 

நோக்கம்:

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் கற்றல் பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஓன்று சேர்ந்து செயல்படுதல் ஆகும்.

குறிக்கோள்:

1. தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு வழங்குதல்.

2. தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்துதல் மற்றும் வழிகாட்டுதல்.

3. சிறந்த பயிற்சி மையங்களை உருவாக்குதல் மற்றும் வழிநடத்துதல்.

4. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்.

செயல்பாடு:

1. உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பயிற்சி மைய பதிவுச் சான்றிதழ்.

2. சங்க நிர்வாகக் குழுவின் சார்பாக, தரச் சான்றிதழ்/அங்கீகாரம் ஆணை வழங்கப்படும்.

3. சிறப்புக் குழுவின் மூலம் உறுப்பினர்களுக்கு சமுதாய பாதுகாப்பு வழங்கப்படும்.

4. TUITION / IAS/NEET/TNPSC / TUTORIAL உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சி மையங்களுக்கு, தனித்தனி ஒருங்கிணைப்பாளர்கள்.

5. வட்ட / மாவட்ட / மண்டல / கோட்ட/ மாநில அளவிலான நிர்வாக கட்டமைப்பு.

6. ஆண்டுக்கு ஒருமுறை மாநிலம் தழுவிய சிறப்பு பயிற்சி பட்டறைகள் (உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள்).

7. ஆண்டுதோறும் பயிற்சி மைய மாணவர்களுக்காக தனித்திறன் போட்டிகள் .

8. அவசர மருத்துவ தேவைகளுக்கு தகுதி வாய்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.20,000/- வரை கடன் வழங்கப்படும்

9. மேம்படுத்தப்பட்ட சலுகை விலையிலான சிறப்பு வினா - வங்கித் திட்டம்.

10. அனைத்து மாவட்ட பயிற்சி மைய விடைத்தாள்கள் பகிர்ந்து மதிப்பீடு செய்தல்.

11. சிறப்புக் கல்விச் சுற்றுலாத் திட்டம். ( மாவட்ட வாரியாக தமிழகம் முழுவதும் )

12. கற்றல் பயிற்சி மையத்திற்கான தர நிர்ணய ஆணைக்குழு.

13. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான அரசுப் பொதுத் தேர்விற்கு இணையான மாதிரி சங்கத் தேர்வு திட்டம்.

14. உள்ளூர் பயிற்சி மையங்கள் முதல் அனைத்து மாவட்ட பயிற்சி மையங்களும் ஒருங்கிணைப்பு.

15. ஆண்டுதோறும் பயிற்சி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த கற்றல் பயிற்சி மைய விருது, சிறந்த மாணவர்களுக்காக விருது போன்ற மாநில விருதுகள் வழங்கப்படும்.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3gioul8
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments