Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பணிநிரந்தரம் எப்போது?காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

பணிநிரந்தரம் எப்போது? 

காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கை, வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

பட்ஜெட்டில் முதல்வர்  அறிவிக்க வேண்டுகோள்.

11 கல்வியாண்டாக  தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் தங்களுக்கான பணிநிரந்தரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  காத்திருக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

தேர்தல் அறிக்கையிலும் சேர்த்து வாக்குறுதி அளிக்கப்பட்டது.

எனவே தங்களது கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றித்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது:-

முதல்வர், கல்விஅமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு நிகழ்ச்சிக்கு வருகை புரியும்போது  பணிநிரந்தரம் செய்ய கேட்டு  கோரிக்கை மனு கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறோம். 

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் எங்களை நிரந்தரம் செய்ய சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களை நிரந்தரம் செய்ய சொல்லி அரசுக்கு கோரிக்கை வைத்தும் உள்ளார்கள்.

பட்ஜெட்டிலேயே முதல்வர் எங்களை நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்.

2012 ஆம் ஆண்டு நியமித்த 16549 பேரில், இப்போதுள்ள  12ஆயிரம் பேருக்காக, வாழ்வாதாரம் வேண்டி,  திமுக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

5 வருடம் வேலை செய்தால் போதும் என்று கோயில் பணியாளர்களை நிரந்தரம் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கல்வித்துறையில் நாங்கள் 10 கல்வியாண்டே முடித்து விட்டோம்.

இப்போது 11வது கல்வியாண்டு தொடங்கிவிட்டது.

ஆனாலும், இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம்.

மேலும் இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்ட சூழலில் அவர்களால் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்களின்  வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே தொகுப்பூதிய ஆசிரியர்களின் குடும்பங்கள், வாழ்வாதாரம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தற்போது பணிபுரியும் பணியிடங்களிலேயே பணிநிரந்தரம்  செய்ய வேண்டும் என கேட்டு வருகிறோம்.

எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கலைஞர் முதல்வராக இருந்தப்போது 55 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தார்.

அதுபோலவே தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிரந்தரம் செய்திட வேண்டும் என்றார்.

தொடர்புக்கு :-
சி.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3ieGXzZ
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments