ரம்பூட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
ரம்பூட்டான் (Rambhutan) என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த (Hairy) எனப் பொருள்.

ரம்பூட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் பருமனைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.
ரம்பூட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க உதவி செய்கிறது.
இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க செய்கிறது. எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது.

ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக்(Dysentery) குணப்படுத்தும். ரம்பூட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை தடுக்கும்.
இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது. என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ரம்புட்டான் பல அளவான இனிப்புடன், அட்டகாசமான சுவையுடன் உள்ள இயற்கையின் படைப்பு. லேசான புளிப்பு கலந்த இனிப்புடன் காணப்படும் இந்த பலத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்கின்றனர்.
சத்துக்கள்:
இந்த சின்ன ரம்புட்டான் பழத்தில், புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துகள், அதிக அளவு நீர்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள், விட்டமின் சி, விட்டமின் பி1(தயாமின்), விட்டமின் பி3(நியாசின்), விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்:
ரம்புட்டானின் இலை, பட்டை, வேர் மற்றும் பழம் போன்றவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்டவைகளுக்கு ரம்புட்டான் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இது இரும்பு சத்தின் மூல ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.
இரும்புச்சத்து இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை, சோர்வு, மயக்கம் ஆகியவற்றை இப்பழத்தினை உண்டு சரி செய்யலாம்.இப்பழத்தில் காணப்படும் பாஸ்பரஸ் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் நன்கு செயல்படச் செய்கிறது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3BBTIO8
via IFTTT
0 Comments