Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை சதவீதம் பாடத்திட்டம் குறைப்பு? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில்,  கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு  நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக  பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 

அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழல் இருப்பதால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அதன்படி,


1 முதல் இரண்டாம் வகுப்புக்கு - 50% பாடங்கள் குறைப்பு.

3 முதல் 4 ஆம் வகுப்பு வரை - 49% பாடங்கள் குறைப்பு.

5 ஆம் வகுப்புக்கு - 48% பாடங்கள் குறைப்பு.

6 ஆம் வகுப்புக்கு - 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு

7,8-ம் வகுப்பு வரை 40% - 50% பாடங்கள் குறைப்பு.

9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.

10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.


11, 12-ம் வகுப்புகளுக்கு 35% - 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3AHlCa9
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments