வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்பட்டு, அதில் தரப்பட்டுள்ள தகவல்களில் குளறுபடிகள் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்ய ஏதாவது ஒரு நகரில் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அனுப்பப்படும். அந்த அதிகாரி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை தன்னிச்சையாக வேறு ஒரு நகரைச் சேர்ந்த வருமான வரி உயர் அதிகாரிக்கு செல்லும்.
இந்த நடைமுறையால் வருமான வரி தொடர்பான குறைகளுக்கு, ஒருவர் தன் வட்டார வருமான வரி அதிகாரியை நேரில் சந்திக்க தேவையில்லை. இந்த திட்டத்தில் யாருடைய வருமான வரி கணக்கு தாக்கலை, யார் ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியாது. இதனால் வரியை குறைத்து மதிப்பீடு செய்வது உள்ளிட்ட ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் வரி மதிப்பீடு தொடர்பான புகார்கள், அபராதம், மேல்முறையீடு ஆகியவற்றுக்கு மூன்று மின்னஞ்சல் முகவரிகளை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.
* அதன்படி வரி மதிப்பீடு புகாரை samadhan.faceless.assessment@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
* அபராதம் தொடர்பான குறைகளுக்கு samadhan.faceless.penalty@incometax.gov.in மற்றும்
* மேல்முறையீட்டுக்கு samadhan.faceless.appeal@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3yxUQ3r
via IFTTT
0 Comments