Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

வழக்கு தொடர்ந்ததால் பழிவாங்கும் வகையில் கலந்தாய்வு நெறிமுறைகள் - ஆசிரியர் பயிற்றுனர்கள் கொந்தளிப்பு.

வழக்கு தொடர்ந்ததால் பழிவாங்கும் வகையில் கலந்தாய்வு நெறிமுறைகள் - ஆசிரியர் பயிற்றுனர்கள் கொந்தளிப்பு.

'வழக்கு தொடர்ந்ததால் பழி வாங்கும் நோக்கில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நெறிமுறைகள் இடம் பெற்றுள்ளன' என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.


ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு போல் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 2014 முதல் நடத்தவில்லை. பாதிக்கப்பட்டோர் வழக்குகள் தொடர்ந்ததால் கலந்தாய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிடப் பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை இல்லாத தால் அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டு விசாரணைக்கு வந்த நிலையில், பணிமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வளமையஆசிரியர் முன்னேற்றசங்க மாநில தலைவர்சம்பத், துணை தலைவர் முத்துக்குமரன் கூறியதாவது:பள்ளிக்கு மாறிச் செல்ல தயாராக உள்ளோம். வெளிப்படை யான கலந்தாய்வு நடத்த வேண்டும். 


எம்.ஹெச்.ஆர்.டி.,யில் தமிழகத்தில் 5984 ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காண்பிக்கப்பட்டு நிதி பெறப்படுகிறது. ஆனால் தற்போது 3700 இடங்கள் மட்டுமே காண்பிக்கப் பட்டுள்ளன. ஆசிரியர் பொது மாறுதலில் முதலில் மாவட்டத்திற்குள் பின் மாவட்டம் விட்டு மாவட்டம் சீனியாரிட்டி பின்பற்றப்படும். 


விரும்பிய இடம் கிடைக்காவிட்டால் மறுக்கும் (விருப்பம் இல்லை என தெரிவிப்பது) வாய்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.ஆனால் அதுபோன்ற நடைமுறை இந்த கலந்தாய்வில் இல்லை. மாநில சீனியாரிட்டி பின்பற்றப்படுகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற நிலையில், வழக்கு தொடர்ந்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு உள்ளது. மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்றனர்.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3juftIQ
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments