வருமான வரித் தாக்கல் தொடர்பான பல்வேறு படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட படிவங்களை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வரி செலுத்துவோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, வருமான வரித் தாக்கல் கடைசி தேதியை நீட்டித்து வருமானம் வரித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை ட்விட்டரில், வரி செலுத்துவோர் மற்றும் இதர பங்குதாரர்கள் அளித்த புகார்களை பரிசீலித்தபின், வருமான வரித் தாக்கல் படிவங்களை மின்னணு வடிவில் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதன்படி, 15CC படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 2020-21ஆம் நிதியாண்டுக்கான படிவ எண் 1-இல் உள்ள equalization levy அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
64D படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 64C படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/2VytA6B
via IFTTT
0 Comments