Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

மத்திய அரசு அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதனை முறைப்படுத்துவதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.


இட ஒதுக்கீடு:


தமிழகத்தில் செயல்படும் அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் அனைத்து வசதிகள் மற்றும் திட்டங்களும் சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் ஆரம்ப நிலை கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை படித்து முன்னேற பல உதவிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வி கற்கும் காலத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.


இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்க முடியும். இதேபோல், அவர்கள் பணி புரிவதற்கும் உதவி புரியும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதில், அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே முதல்வர் முக ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்தினர்.


இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து அறிவிப்புகளும் முறையாக செயல்படுவதை கவனிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பணிகளில் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். முதல்கட்டமாக கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அரசின் உத்தரவின் படி கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




from கல்வி அமுது https://ift.tt/3AjsoDa
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments