Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளிகளில் செய்முறை உபகரணங்கள் கொள்முதல் செய்தலின் போது விதிமீறல் விசாரணை அறிக்கை கோரி உத்தரவு

பள்ளிகளில் செய்முறை உபகரணங்கள் கொள்முதல் செய்தலின் போது விதிமீறல் குறித்து விசாரணை அறிக்கை கோரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு செய்முறை உபகரணங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கொள்முதல் செய்ததில் பெண் தலைமை ஆசிரியர்களிடம் தனியார் நிறுவனங்களுக்கு காசோலை அளிக்க வற்புறுத்தப்பட்டு தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே , இப்புகார் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தம் ஆளுகைக்குட்பட்ட மாவட்டங்களில் உரிய விசாரணை மேற்கொண்டு தங்களின் திட்டவட்டமான அறிக்கையினை காலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு பணிந்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இது மிகவும் அவசரம்.




from கல்வி அமுது https://ift.tt/3ExOSTm
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments