Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!


ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை - 600 006 பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.


நாள் : 21.10.2021 இந்நிலையில் அரசாணை நிலை எண் .144 பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) ) துறை , நாள் 18.10.2021 ன்படி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.



from கல்வி அமுது https://ift.tt/3B0KQQI
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments