தமிழகத்தில் பள்ளிகளை திறக்கும் போதே காலியாக உள்ள சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்துணவு ஊழியர்கள்:
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு மதிய உணவு, வாழைப்பழம், முட்டை மற்றும் பள்ளி சீருடை போன்ற அனைத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பலனடைகிறர்கள். கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களுக்கு நேரடியாக உணவு பொருட்களை வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது.
மேலும் தற்போதைய நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கான காலியிடங்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பள்ளிகள் முழுவதுமாக நவம்பர் 1 முதல் திறக்க இருக்கும் நிலையில் விரைவில் பணியிடங்களை நிரப்ப வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில், தலைவர் முத்துக்குமார் தலைமையில், மாவட்டச் செயலாளர் மிக்கேல் அம்மாள், மாவட்ட இணைச் செயலாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவுத் துறையில் காலியாக உள்ள 49 ஆயிரம் பணியிடங்களை பள்ளி திறக்கும்போதே நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3vGR5ba
via IFTTT
0 Comments