Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!

 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஆதிக்கம் இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் கணக்கீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதன்பின்பு பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய தமிழக அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இதனால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணக்கர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பாதுகாப்பான சூழ்நிலை

திருச்சியில் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்.

கட்டாயப்படுத்தவில்லை

அப்போது தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமே என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றனவே என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்த அன்பில் மகேஷ், 'ஒரு ஒழுங்குக்கு மாணவர்கள் பழக வேண்டும் என்பதற்காகவே நவ.1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம். பள்ளிக்கு கட்டாயமாக வர வேண்டும் என்று அரசு கூறவில்லை' என்று கூறினார்.

குரல் கொடுத்து வருகிறார்

தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:- மாநில உரிமைகளுக்காக மு.க.ஸ்டாலின் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவர் குரல் கொடுத்தார். இப்போதும் மாநில உரிமைகள் முதல் குரல் கொடுப்பவர்தான் நீட் தேர்வு ரத்து குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

வலு சேர்ப்பதாக அமையும்

அதற்கு அவர்களின் கருத்துக்களை அறிந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீட் தேர்வு விவகாரத்தில் அந்த மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில், நமது முதல்வரின் குரலுக்கு கண்டிப்பாக வலு சேர்ப்பதாக அமையும் என்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments