Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

இணையவழியில் இன்று நடைபெறுகிறது ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் பங்கேற்கலாம்

...

 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர்ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை 10.30 மணிக்குஇணையவழியில் நடைபெறு கிறது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவு ஆகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.


இந்த தயக்கத்தைப் போக்கி, இத்தேர்வுகளுக்கு படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப்பிறந்தோம்’ என்ற வழிகாட்டு நிகழ்ச்சி இன்று காலை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி - 2020 தேர்வுக்கான முடிவில், அகில இந்திய அளவில் 157-வது இடம்பிடித்த சென்னையை சேர்ந்த ஏ.கேத்தரின் சரண்யா, 344-வது இடம்பிடித்த தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த எம்.அருண் பாண்டியநாதன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

இணைய வழியில் இந்த நிகழ்ச்சிநடைபெறுகிறது. 



கரோனா பரவல்காரணமாக வீடுகளில் தனித்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற லாம்.

இதில் பங்கேற்க விரும்புவோர் http://www.htamil.org/00089 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம்.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3jRPECh
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments