Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Jacto-geo போராட்ட காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்துதலை பதிவு செய்தல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Jacto geo Strike period Regularised As Working day GO No:113 Date :13.10.2021


2016, 2017 மற்றும்‌ 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ நடைபெற்ற அரசுப்‌ பணியாளர்களின்‌ வேலை நிறுத்தப்‌ போராட்ட காலங்கள்‌ மற்றும்‌ தற்காலிகப்‌ பணி காலம்‌ - பணிக்காலமாக முறைப்படுத்துதல்‌ - ஆணைகள்‌ வெளியிடப்படுகின்றன.


அரசாணை நிலை) எண்‌.113 நாள்‌ 13.10.2021

பணிப் பதிவேட்டில் வேலை நிறுத்தப் போராட்ட காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்துதலை பதிவு செய்தல் சார்ந்த  முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


●  CEO Namakkal   Date:25.10.2021

●  Krishnagiri CEO Proceedings Date :25.10.2021

CEO Pudhukkottai Proceeding  Date:27.10.2021

CEO Thiruvarur Proceeding  Date:27.10.2021

CEO Thiruvarur Proceeding  Elementary Education  DATE:27.10.2021



கடந்த 2016, 2017 மற்றும்‌ 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌, சில அரசுப்‌ பணியாளர்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள்‌ தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப்‌ போராட்டங்களில்‌ ஈடுபட்டனர்‌. அவ்வேலை நிறுத்தப்‌ போராட்ட காலங்களுக்கு, பணிபுரியவில்லை என்றால்‌ ஊதியமில்லை” என்ற கொள்கையின்‌ அடிப்படையில்‌ அவர்களுக்கு ஊதியம்‌ பெற்று வழங்கப்படவில்லை. மேலும்‌, அவர்கள்‌ மீது ஒழுங்கு நடவடிக்கைகளும்‌, குற்றவியல்‌ வழக்குகளும்‌ தொடரப்பட்டன.


மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ மேற்காணும்‌ அறிவிப்பிற்கிணங்க,பின்வரும்‌ ஆணைகள்‌ வெளியிடப்படுகின்றன:-

 2016, 2017 மற்றும்‌ 2019ஆம்‌ ஆண்டுகளில்‌ நடைபெற்ற அரசு பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ வேலை நிறுத்தப்‌ போராட்ட காலங்கள்‌ 10.02.2016 முதல்‌ 19.02.2016 வரை, 22.08.2017 (ஒரு நாள்‌ அடையாள வேலை நிறுத்தம்‌), 07.09.2017 முதல்‌ 15.09.2017 வரை மற்றும்‌ 22.01.2019 முதல்‌ 30.01.2019 வரை) பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன


அவ்வேலை நிறுத்தப்‌ போராட்டங்களின்‌ காரணமாக அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ குற்றவியல்‌ வழக்குகள்‌ அனைத்தும்‌ கைவிடப்படுகின்றன .அவ்வொழுங்கு நடவடிக்கைகளின்‌ காரணமாக, பதவி உயர்வு பெறுவதில்‌ ஏதேனும்‌ பாதிப்பு ஏற்பட்டிருந்தால்‌ அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌


வேலை நிறுத்தப்‌ போராட்டத்தின்‌ போது பணியிட மாற்றம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில்‌ மீண்டும்‌ பணியமர்த்தும்‌ வகையில்‌, பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின்‌ போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக்‌ கல்வி மற்றும்‌ உயர்கல்வித்‌ துறைகளால்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌:


07.09.2017 முதல்‌ 15.09.2017 வரையிலான வேலை நிறுத்த நாட்களை ஈடுசெய்யும்‌ வகையில்‌ சனிக்கிழமை, விடுமுறை நாட்களில்‌ பணிபுரிந்து ஊதியம்‌ பெற்ற பணியாளர்களுக்கு, இவ்வேலை நிறுத்தக்‌ காலத்தினை தற்போது பணிக்காலமாக முறைப்படுத்துவதன்‌ காரணமாக மீண்டும்‌ ஊதியம்‌ பெற்று வழங்கும்‌ நிலை எழாது


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3pIi5X1
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments