Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான அனுமதி சீட்டு ( Admit Card ) வெளியீடு : பதிவிறக்கம் செய்வது எப்படி?

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான அனுமதி சீட்டு ( Admit Card ) 22.10.2021 முதல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

.com/img/a/

பல்தொழில்நுட்பக் கல்லுாரி 2017-2018 ஆம் ஆண்டிற்கு அரசு விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021 , 29.10.2021 , 30.10.2021 மற்றும் 31.10.2021 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது . இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tm.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 22.10.2021 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original Passport Size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும். தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது.


தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் . மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சி தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) யன்படுத்தி www.trb.tn.nic.in ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது . மேலும் நழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் . தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.

The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website https://ift.tt/1bLYTHT from 21.10.2021 onwards in the following steps.


              To familiarize with Computer based examination Practice test / Mock test is also available.


              Step 1 – Click Login


              Step 2 – Enter User ID and password


              Step 3 – Click Dashboard


              Step 4 – Click Here to download Admit Card


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3vxjlgv
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments