தமிழகத்தில் ரூ.169 கோடி மதிப்பீட்டில் புதிய அரசுப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பள்ளிக் கல்வித்துறை சார்பில் 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள் 1,05,168 பேருக்குத் தமிழக முதல்வர் ரூ.196.91 கோடி ஊக்கத் தொகையை வழங்கும் பணியை இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3CPMjLe
via IFTTT
0 Comments