2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் , பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் எனக் கருதப்படுவதால் , இவ்வாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும் , அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் கருதியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஏற்பாடாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு கீழ்கண்ட விவரங்களின் அடிப்படையில் நிரப்பி கொள்ள பார்வையில் காண் அரசாணையின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு: மாவட்ட வாரியாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட பாட வாரியான பணியிடங்கள் எண்ணிக்கை!
DSE - PG Temporary Post Proceedings - Download here...
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3DZdaoS
via IFTTT
0 Comments