Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 TAMIL REFRESHER COURSE MODULE ANS KEY 2021-22

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே போல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி சரிசெய்யும் வகையில் அரசானது புத்தாக்க பயிற்சி கட்டகத்தினை வழங்கியுள்ளது.இந்த பதிவில் 6-ம் வகுப்பு தமிழ் புத்தாக்க பயிற்சி கட்டக விடைகள் இடம் பெறுகின்றது. இது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- 6-ம் வகுப்பு தமிழ் புத்தாக்க பயிற்சிக் கட்டக விடைகள்- அடிப்படை மொழித்திறன்கள்
File Type-PDF

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3kari6U
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments