அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியலை கட்டாயமாக்க வேண்டும்: வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை...
அரசு பள்ளிகளில் மீண்டும் 6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது..
இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் வெ.குமரேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன்முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6-ம் வகுப்பில் இருந்தே அறிமுகப்படுத்தியவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி.
அவர் கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு நியாயமான கிடைக்க வேண்டிய கணினி கல்வியை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது.
எனவே, தற்போதைய திமுகஅரசு, அரசு பள்ளிகள் மேன்மை அடையவும், கிராமப்புற ஏழைஎளிய மாணவர்கள் உலகத்தரத்துக்கு இணையாக உயர்ந்திடவும் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாய கல்வியாக கொண்டுவர வேண்டும். கேரளாவில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாயமாகவும் 6-வது பாடமாகவும் உள்ளது.
கணினி ஆசிரியர்
தரம் உயர்த்தப்பட்ட அனைத்துஅரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம், பிஎட் முடித்த வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014
sourec:Hindu Tamil.
https://ift.tt/3ERoWSi
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3H1HSzm
via IFTTT
0 Comments