Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

நீட் தோ்வில் வெற்றி: பழங்குடியின மாணவிக்கு அமைச்சா் நேரில் வாழ்த்து

நீட் தோ்வில் வெற்றி பெற்ற கோவையைச் சோ்ந்த பழங்குடியின மாணவியை தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.


கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம் ரொட்டிக்கவுண்டனூா் ஊராட்சியைச் சோ்ந்த மாணவி சங்கவி, அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவி சங்கவியை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா். அப்போது மாணவிக்கு மடிக்கணினியை அமைச்சா் பரிசாக வழங்கினாா்.


மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன், வருவாய் கோட்டாட்சியா் வி.இளங்கோ, ஆதிதிராவிடா் நல அலுவலா் வசந்தராம்குமாா், மதுக்கரை வட்டாட்சியா் பா்சானா ஆகியோா் உடனிருந்தனா்.


இதைத் தொடா்ந்து அமைச்சா் கயல்விழி செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


பழங்குடியின மாணவி படித்து டாக்டராக வேண்டும் என முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்று தனது குடும்பத்துக்கும், தான் சாா்ந்துள்ள பகுதிக்கும் பெருமை தேடித்தந்துள்ளாா்.


அவரை ஊக்கப்படுத்தவும், பிற பழங்குடி மாணவ - மாணவிகளுக்கு இவா் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சங்கவியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன். மாணவி சங்கவியின் உயா் கல்விக்கு, துறை சாா்ந்தும் தனிப்பட்ட முறையிலும் தேவையான உதவிகள் செய்யப்படும். அவரது கல்விக்கு உதவும் என்பதால் அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.


ஆதி திராவிட மக்களைக் காட்டிலும் பழங்குடியின மக்கள்தான் கல்வியில் பின்தங்கியுள்ளனா். அவா்களுக்குத் தேவையான கல்வியைக் கொடுத்தாலே அவா்களுக்கு தேவையானவற்றை அவா்களால் பெற முடியும். இந்த குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழங்குடி மாணவா்களுக்கு எளிதில் ஜாதி சான்றிதழ் கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3kclOIA
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments