அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகள் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் மாணவா்களுக்கான பாடத்திட்டம், தோ்வு, மதிப்பெண்கள் வழங்கும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருந்து வரக்கூடிய அக மதிப்பீட்டு மதிப்பெண் 20 சதவீதத்திலிருந்து 40 ஆக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரையில் 20 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 80 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்விற்கும் வழங்கப்பட்டுவந்தன.
புதிய நடைமுறையில் (40+60) 40 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 60 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்வுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெறுவதற்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் மாணவா்கள் தாங்கள் வைத்துள்ள அரியா்களை முடிக்க நான்கு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. புதிய நடைமுறையின்படி இந்த விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் படிப்பினைப் பாதியில் நிறுத்திவிட்டு இடைநின்றால், மீண்டும் சோ்ந்து தொடா்ந்து படிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் அரியா் வைத்துள்ள மாணவா்கள் அடுத்தடுத்து வரக்கூடிய பருவத் தோ்வுகளில் அரியா் தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3wG1Lrc
via IFTTT
0 Comments