கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு மே மாதம் முதல் 13 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை ஜூலை மாதம் 28 சதவீதமாக உயர்த்தி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அக்டோபரில் இது மேலும் 3 சதவீதம் உயர்த்தப் பட்டு 31 சதவீதமானது.கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உயர்வை அளிக்கும்படி, மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த மாத துவக்கத்தில் இந்த நிலுவை தொகை வழங்கப்படுவதோடு, அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/329MJPl
via IFTTT
0 Comments