தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை 600 006
ந.க.எண். 42857 /டபிள்யு.1/இ1/2021, நாள் 20. 12.2021
-----
பொருள் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2022 ல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் – சார்பாக.
பார்வை அரசாணை (நிலை)எண். 176, பள்ளிக் கல்வித் (பக5(1) துறை,
நாள் 17.12.2021
------
01.01.2022 நிலவரப்படியான அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, கீழ்க்காண் விவரங்கள் அளிக்கப்படவேண்டும்.
முதுகலை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்
1. 2003-2004 ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டு 1.06.2006 முதல் பணிவரன் முறை செய்யப்பட்ட மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) ஆகியோரின் விவரங்களை அவர்களது தரஎண் /வருடத்துடன் அனுப்ப வேண்டும்.
2. கருணை அடிப்படை மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள்.
3. முந்தைய ஆண்டுகளில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெறாமல், 01.01.2022 அன்றைய நிலவரப்படி தயார் செய்யப்படும் தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள்
4. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, 2016,2017 மற்றும் 2018ல் தற்காலிக உரிமை விடல் செய்து முழு மூன்று தேர்ந்தோர் பட்டியல் ஆண்டுகள் (3 panel years) நிறைவு செய்துள்ள முதுகலை ஆசிரியர்கள் .
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சார்பான விவரங்கள்
1. 2013-2014ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை தவிர மீதமுள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
2. முந்தைய ஆண்டுகளில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெறாமல், 01.01.2022 அன்றைய நிலவரப்படி தயார் செய்யப்படும் தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
3. ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, 2016,2017 மற்றும் 2018ல் தற்காலிக உரிமை விடல் செய்து முழு மூன்று தேர்ந்தோர் பட்டியல் ஆண்டுகள் ( 3 panel years) நிறைவு பெற்றுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்கள்.
மேலும் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு Tamil nadu Government Gazette Part III section 1(b) date 30.01.2020 ல் அரசாணை நிலை எண். 14 பள்ளிக்கல்வி (பக2(1)) நாள். 30.01.2020 ல் தெரிவித்துள்ளவாறு கீழ்க்கண்ட துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
1. Tamil Nadu Government Office Manual Test
2. Account test for Executive Officers Or
Account test for Subordinate officers part I
3. Tamil Nadu School Education Department Administrative test Paper -1 and paper- II
தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி
17(b)ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.
தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி
17(a) ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடையாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மற்றும் தண்டனை பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்கப்படும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்ல விரும்பும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டியதில்லை. அத்தகைய தலைமையாசிரியர்களின் விருப்பக் கடிதத்தினை மட்டும் அனுப்பினால் போதுமானது.
மேலும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களைப் பொறுத்தமட்டில் அரசாணையின்படி, மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பக் கடிதம் அளிப்பது (அல்லது) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பக் கடிதம் அளிப்பது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு பதவி உயர்வில் செல்ல அளிக்கப்படும் விருப்பக் கடிதமே இறுதியானது. அதனை மீண்டும் ஒரு முறை மாற்றி அமைத்திட இயலாது. ஆகையினால் மாவட்டக் கல்வி அலுவலராக (அல்லது) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வில் செல்வதற்கு அளிக்கப்படும் விருப்பக் கடிதத்தினை ஆழ்ந்து சிந்தித்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அளிக்க அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு ம், மேலும் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பக் கடிதம் அளித்தவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராகவும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு கோரும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகவும் பதவி உயர்வு பெற விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சார்ந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட விவரங்களை சென்ற ஆண்டு தயார் செய்து அனுப்பப்பட்ட இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியுடைய ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு- 1. முதுகலை/தலைமை ஆசிரியரின் விவரங்கள் சார்ந்த பட்டியல்
2. Access Sheet ஒம்/-
ஆணையர்.
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வழி) /
நகல்: 1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
2: மாநிலத் திட்ட இயக்குநர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம்,
சென்னை- 600 006 - அவர்களுக்கு தகவலுக்காகப் பணிவுடன்
அனுப்பப்படுகிறது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/32pMCPK
via IFTTT
0 Comments