Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் மாற்றம் – முழு விவரங்கள் இதோ!

மத்திய அரசு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் பெரிய மாற்றத்தை செய்துள்ள நிலையில் இதற்கான கணக்கீடு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.


DA உயர்வு


இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை உயர்வுடன் HRA மற்றும் TA உள்ளிட்ட சில கூடுதல் கொடுப்பனவுகள் பண்டிகை கால பரிசாக வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த வகையில் DA உயர்வை தொடர்ந்து அதனை கணக்கிடுவதற்கான பார்முலாவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமீபத்தில் திருத்தி இருக்கிறது.

 

இந்த புதிய WRI (ஊதிய விகிதக் குறியீடு) படிதற்போதுள்ள அடிப்படை ஆண்டான 1963-65ஐ அடிப்படை ஆண்டு 2016=100 உடன் மாற்றுகிறது. அதாவது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பரிந்துரைகளின்படி, தேசிய புள்ளியியல் ஆணையம், குறியீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அடிப்படை ஆண்டை 1963-65லிருந்து 2016க்கு மாற்றியது. இப்போது பணவீக்க தரவுகளின் அடிப்படையில் முக்கியமான பொருளாதார அளவீடுகளுக்கு அரசாங்கம் அவ்வப்போது அடிப்படை ஆண்டை மாற்றுகிறது குறிப்பிடத்தக்கது.


அகவிலைப்படி (DA) கணக்கீடு:


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூலை வரை ஆண்டுக்கு இருமுறை என்ற வகையில் DA திருத்தம் செய்யப்படுகிறது. அகவிலைப்படியின் தற்போதைய விகிதத்தை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.


அகவிலைப்படி (DA) என்றால்:


அகவிலைப்படி (DA) என்பது ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை செலவுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் கூடுதல் தொகையாகும். பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தப் பணம் ஒவ்வொரு அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3xHqThx
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments