Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு முன்னேற்பாடு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்களின் செயல்முறைகள்.




2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 24.01.2022 அன்று மாவட்டத்திற்குள் 25.01.2022 அன்று மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் 28.01.2022 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளதால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்திட தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட நாட்களில் காலை 9.00 மணிக்கு கலந்தாய்விற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் DATA CARD , LAPTOP & SYSTEM போன்ற உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


24.01.2022 மாவட்டத்திற்குள் 25.01.2022 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மற்றும் 28.01.2022 அன்று மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு தகுதி உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.


 மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிமூப்பினை சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள 22.01.2022 அன்று மாலை 5.00 மணிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி முறையீட்டின் மீது திருத்தங்கள் செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.


கலந்தாய்வு நடைபெறும் நாளன்று பணிமூப்பு சார்பான முறையீடு பெறப்பட்டால் அம்முறையீட்டினை ஏற்றுக் கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.


அனைத்து ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை CEO LOGIN -ID ல் பயன்படுத்தி EMIS இணைதளத்தில் உள்ளீடு செய்ய 22.01.2022 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி உள்ளீடு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சரிபார்த்து எவ்வித ஆசிரியர் காலிபணியிடங்கள் அனைத்தும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


அனைத்து வகையான ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் நாளை 23.01.2022 மதியம் 3.00 மணியளவில் வெளியிடப்படும். இதில் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் சார்பான முறையீடுகள் ஏதேனும் இருப்பின் 24.01.2022 காலை 9.00 க்குள் EMIS இணைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


பிற அனைத்து வகையான ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களில் ( மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை தவிர்த்து ) ஏதேனும் முறையீடுகள் இருப்பின் 25.01.2022 மாலை 8.00 மணிக்குள் EMIS இணைதளத்தில் பதிவேற்றம் செய்திடவேண்டும்.


மாறுதல் கோரி விண்ணப்பித்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரிகளின் இறுதி முன்னுரிமைப்பட்டியல் 23.01.2022 நன்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும். 


மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தவிர பிற அனைத்து வகையான ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை சார்பாக முறையீடுகள் ( claims and objections ) ஏதுமிருப்பின் அதுகுறித்து மேல்முறையீடு செய்ய 25.01.2022 மாலை 8.00 மணி வரை EMIS இணைதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டித்து வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 இதன் தொடர்ச்சியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் முறையீடுகளை சரிபார்த்து ஒப்பிட்டு CEO LOGIN -ID ல் உரிய ஒப்புதல் ( Apprpoval or rejected ) அளித்திட வேண்டும். 


மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறும் , கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் முறையீடுகள் ஏதேனும் தெரிவித்தால்அதனை ஏற்றுக் கொள்ள இயலாது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3rBHaSG
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments