Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

EMIS மூலம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

EMIS மூலம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்து 2021-2022 -க்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்கண்டுள்ளவாறு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது . 

1. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் மாறுதல் விண்ணப்பங்களை தமது பள்ளியில் உள்ள EMIS இணையதளத்தில் ( Teacher Transfer பதிவேற்றம் செய்து , பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று , அதன் நகல் 02 பிரதிகளை அந்தந்த மாவட்டக் கல்விக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022- அன்று காலை 10.00 மணிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும்.


2. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் மாறுதல் விண்ணப்பங்களை தமது பள்ளியில் உள்ள EMIS இணையதளத்தில் ( Teacher Transfer ) பதிவேற்றம் செய்து , பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று . அதன் நகல் 02 பிரதிகளை அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022 அன்று காலை 10.00 மணிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும் 


3. மேற்காணும் அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களின் நகல் 1 - னை தத்தம் மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக தொகுத்து , அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022 அன்று மதியம் 3.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3JCynYO
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments