தமிழகத்தில் மழலையர் பள்ளிகளில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நா்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் மழலையர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், புற்றுநோயால் ஏற்படும் மரணங்களையும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டைவிட விபத்துகளால் ஏற்படும் மரணம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/clWy6uC
via IFTTT
0 Comments