தமிழகத்தில் அரசு பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாட திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கு நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதச்சக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் பின்பற்றப்படும் சமச்சீர் கல்வி முறையால் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ ஐ டி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
சமச்சீர் கல்வி திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தை தான் மாநில அரசு பின்பற்ற வேண்டும் என எந்த சட்டப்பிரிவு கூறுகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் எந்த விதிமீறலும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/jtgsbBT
via IFTTT
0 Comments