இந்நிலையில், சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே24ம் தேதி வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2ம் பருவத் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 26ம் தேதி தொடங்கும் 2ம் பருவத் தேர்வுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வு கால அட்டவணை, தேர்வு நேரம், தேர்வுகள் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதள முகவரி www.cbse.gov.in அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியிருக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வினாத்தாளை படிக்கச் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/hMNxIHC
via IFTTT
0 Comments