'டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என, அனைத்தையும் மறு ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, விரைவில் குழு அமைக்க உள்ளோம்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - ராஜேஷ்குமார்:
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தொகுதி இரண்டு தேர்வுக்கு, 10.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், போட்டித் தேர்வை எதிர்கொள்ள, அரசு சார்பில் போதிய பயிற்சி மையம் இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்படுமா?
அமைச்சர் தியாகராஜன்:
மூன்றாண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு முன், பல வழக்குகள் தொடரப்பட்டு, முறைகேடு, விதிமீறல் என, தீர்ப்பு வந்தது. எனவே, தேர்வு முறை பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது, 3.50 லட்சம் காலிப்பணியிடங்கள் அரசில் உள்ளன. சில இடங்களில் கூடுதல் நபர்கள், சில இடங்களில் யாருமே இல்லாத நிலை உள்ளது. எனவே, தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என, எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்க உள்ளோம்;
ஆறு மாதங்களுக்குள் பரிந்துரை அளிக்க கூறியுள்ளோம்.குழுவின் பரிந்துரையை பெற்று, முடிவு செய்வோம். அரசுக்கு நிதியை விட மனித வளம் முக்கியம். எனவே, இந்த ஆண்டு நிபுணர் குழு அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து, அடிப்படை சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
அரசு ஊழியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என அனைவரையும் சேர்த்து, ஒரு முழுமையான அறிக்கையை, ஆறு மாதத்தில் அளிக்க உள்ளோம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/dg4qlSn
via IFTTT
0 Comments