TNPSC Group 4 VAO விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அதனால் அந்த தேர்வுகளுக்கான நடைமுறை, பாடத்திட்டம் மற்றும் தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள் குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
TNPSC குரூப் 4:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகம் இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது. சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் குரூப் 4 தேர்வில் உள்ள காலிப்பணியிடங்களையும் வெளியிட்டு உள்ளது. இது குறித்து ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம். குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இடங்கள் வரிசையாக, கிராம நிர்வாக அலுவலர் 274 பதவிகள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3593, ஜூனியர் அசிஸ்டெண்ட் 88, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர் 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்களும், மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அதனை தொடர்ந்து 81 விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் அறிவித்தது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, அறிவிப்பு வெளியானது முதல் ஆன்லைனில் www.tnpsc.gov.in, www.tnpscexams.in விண்ணப்பித்தல் பணி தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முதல் நாளில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி என்றும் கூறியுள்ளனர்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/N2gPC3f
via IFTTT
0 Comments