Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அணுசக்தி கல்வி சங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 200+ பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு

அணுசக்தி கல்வி சங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 200+ பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

அணுசக்தி கல்வி சங்கம் (AEES) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் TGT, PGT & PRT பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Atomic Energy Education Society (AEES)
பணியின் பெயர் TGT, PGT & PRT
பணியிடங்கள் 205
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

AEES காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட அணுசக்தி கல்வி சங்க அறிவிப்பில், TGT, PGT & PRT ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு பிரிவிவுகளின் கீழ் மொத்தமாக 205 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TGT, PGT & PRT கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree கட்டாயம் முடித்திருப்பது அவசியமாகும்.

AEES அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

TGT, PGT & PRT வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பாக 35 வாயடைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

AEES ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற் போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் அளிக்கப்படும்.

  • TGT பணிக்கு Level 7 ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • PGT பணிக்கு Level 8 ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • PRT பணிக்கு Level 6 ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

TGT, PGT & PRT தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

AEES விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 12.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/SZgXOaC
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments