தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, 'தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
இன்றைய காலத்தில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த 5 ஆண்டு காலத்திற்குள் அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வருகிற போது கட்டணக்கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய கல்விப்பணி என்பது சமுதாயத்திற்கு மிகவும் வேண்டிய ஒரு பணியாகும்'. இவ்வாறு அவர் கூறினார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/Q5HsNdI
via IFTTT
0 Comments