Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

1-10 ம் வகுப்பு தமிழ் ஒழுக்க நன்னெறி ஆசிரியர் பாட குறிப்பேடு

 1-10 ம்  வகுப்பு தமிழ் ஒழுக்க நன்னெறி ஆசிரியர் பாட குறிப்பேடு

வகுப்பு  :  1-10

பாடம்        :  தமிழ்

நாள்          : 13.06.2022 - 17.06.2022

வாரம்       : ஜீன் முதல் வாரம்

தலைப்பு  : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்)

ஆக்கம்   : மீனா.சாமிநாதன்,  பட்டதாரி ஆசிரியர்

Click here to Download : 1-10 moral education notes of lesson

மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கும் நன்னடத்தைப் பயிற்சி!


நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடந்துகொள்வதைக் குறிக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அது நம் வாழ்வைத் தலைசிறந்ததாக்கிட வழிவகுக்கும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள், வாழ்க்கை முறை மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாகவும் எழுதி வைத்துள்ளனர்.

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்  படும்’ - அதாவது, ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றிவாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர். அதற்கு அவர் களைக் குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்திவிட வேண்டும். குறிப்பாக 3 வயதில் இருந்து 15 வயதுக்குள் ஒருவர் எப்படி வளர்கிறாரோ அதுவே மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து அவர்களின் இயல்பாகிவிடுகிறது.

குழந்தைகள் நல்லவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் வளர வேண்டுமானால் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது. 

Reactions

Post a Comment

0 Comments