Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

1-10 ம் வகுப்பு அறிவியல் பாட ஒழுக்க நன்னெறி ஆசிரியர் பாட குறிப்பேடு

   1-10 ம்  வகுப்பு அறிவியல் பாட ஒழுக்க நன்னெறி ஆசிரியர் பாட குறிப்பேடு

வகுப்பு  :  1-10

பாடம்        :  அறிவியல்

நாள்          : 13.06.2022 - 17.06.2022

வாரம்       : ஜீன் முதல் வாரம்

தலைப்பு  : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்)

ஆக்கம்   : மீனா.சாமிநாதன்,  பட்டதாரி ஆசிரியர்

Click here to download 

மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கும் நன்னடத்தைப் பயிற்சி!


நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடந்துகொள்வதைக் குறிக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அது நம் வாழ்வைத் தலைசிறந்ததாக்கிட வழிவகுக்கும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள், வாழ்க்கை முறை மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாகவும் எழுதி வைத்துள்ளனர்.

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்  படும்’ - அதாவது, ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றிவாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர். அதற்கு அவர் களைக் குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்திவிட வேண்டும். குறிப்பாக 3 வயதில் இருந்து 15 வயதுக்குள் ஒருவர் எப்படி வளர்கிறாரோ அதுவே மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து அவர்களின் இயல்பாகிவிடுகிறது.

குழந்தைகள் நல்லவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் வளர வேண்டுமானால் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது. 

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்ற முதுமொழிக்கு ஏற்ப தொடக்கக் காலங்களில் இந்த நெறிப்படுத்துதல் இல்லையெனில் பின்னர் ஒருவரது நடத்தையையோ, குணங்களையோ மாற்ற முடியாது. அதனால், அதிகப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவோம்.

தும்மல், இருமல், கொட்டாவி விடுதல் போன்ற நிகழ்வுகளின்போது பொது இடங்களிலும் சரி, வீட்டிலும் சரி வாயை மூடி வெளிப்படுத்த வேண்டும். வெளியில் அலைந்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் குளிக்க வேண்டும். உணவருந்தும் முன்னும் பின்னும் கைகழுவுதல் போன்றவை உடல் நலத்தைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். தினமும் குறைந்தது ஒரு சில மணி நேரமாவது குழந்தைகள் வீட்டிற்கு வெளியே சென்று விளையாட்டு மற்றும் வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்வது, அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனஉளைச்சல்களை போக்கிட உதவியாக இருக்கும்.

 குழந்தைகள் விரும்புகின்ற விளையாட்டு அல்லது கலைத்திறன்களை வளர்க்க நாம் தூண்டுதலாக இருக்கும்போது அவர்களின் வாழ்க்கையில் தெளிவுமுறை சிறப்புறுவதாக இருக்கும். உணவில் தேவையான அளவு காய்கறிகள், பழங்கள், கூடுதல் புரதச் சத்து மிக்க பருப்பு - கொட்டை வகைகளைச் சேர்த்துக்கொள்ளவது மிகவும் நல்லது”


Reactions

Post a Comment

0 Comments