பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி:
தனியார் பள்ளிகளில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/RGNd8TO
via IFTTT
0 Comments